Friday, August 28, 2009

குழப்பல்வாதி மதிமாறனும் சாதீயமும்

மதிமாறன் அளவுக்கு எழுதும் அளவு நான் எழுத்தாளனோ. கணிணியி தமிழ் தட்டசெஉ தெரிந்தவனோ நான் இல்லை.
என் மனதில் பட்டதை நான் எழுதுகிறேன்.
ஏற்கெனவே எனது ஒரு பதிவில் மதிமாறனின் மதிமாறித்தனத்தை எழுதியுள்ளேன்.
மதிமாறனின் தளத்தில் இசையமைப்பாளர் இளையராசா அவர்களை எதனால் போட்டுள்ளார் என்று எனக்கு விளங்காமல் இருந்தது.
தனது சாதிப்பற்றினால்தான் அவர் இளையராசாவை போட்டுள்ளார் என்று எண்ணத்தோன்றுகிறது.
இளையராசாவிடம் இசையைத்தவிர வேறு ஏதும் எனக்கு தெரியவில்லை.
இசையானது மக்களை எழிச்சியடையவும் , சோர்வில் உள்ளவனை புத்துணர்ச்சியாக்கவுமே பயன்பட வேண்டும்,
பசியாலும் பட்டினியாலும் காதடைத்து போய் இருக்கும் என்னைப்போன்ற பாமரர்களுக்கு அந்த இசை எப்படி என் காதில் விழும் ?
பகுத்தறிவு பெரியாரியம் அம்பேத்கரியம் பேசும் மதிமாறன் அக்கருத்துக்களுக்கு சிறிதும் ஒவ்வாத இளையராசாவை போட்டுள்ளது ஏன் ?
ஒரே சாதி என்பதாலா?
சாதி ஒழிப்பு , இரட்டைக்குவளை முறை ஒழிப்பு போராட்டத்தில் மதிமாறன் கலந்துகொள்ளவில்லை என்பது வலைப்பூக்களை நான் படித்ததில் இருந்து தெரிந்துகொண்டேன்.
மதிமாறனுக்கு வேலை ஈழப்போராட்டத்துக்கு எதிரான வானொலிகளில் பேட்டி கொடுப்பது, அங்கு மட்டும் பெரியார் தேவை பேசுவதற்கு , பெங்களூர் குணாவின் கூட்டத்தாலிடம் வானொலி நேரலையில் மாட்டிக்கொண்டு முழித்ததையும் கேட்க நேர்ந்தது.
அனைத்து அமைப்புகளின் தலைவர்களின் தொலைப்பேசி எண்களை வாங்கிவைத்து போனில் பேசிக்கொண்டு அவர்களுடன் நின்று போட்டோ எடுப்பது அதை வலைப்பூவில் போடுவது மட்டுமே வேலையாக கொண்ட மதிமாறனால் தனது கொள்கை என்னவென்பதில் இன்னும் தெளிவடையவில்லை,
ஒன்றுக்கும் பயந்தாரா வறட்டுவாதத்தினை வைத்துக்கொண்டு வலைப்பூவில் எழுதிக்கிழிப்பதால் ஏதும் மக்களுக்கு பயன் உண்டா?
ம க இ க வினர் தங்கள் கொள்கையில் சரியாக உள்ளனர். அவர்கள் களப்போராளிகள், அவர்கள் அமைப்பின் பெண்களும் இரவில் போஸ்டர் ஒட்டுவதை நான் கல்லூரிக்காலத்தில் பார்த்துள்ளேன்,
அந்த அளவுக்கு போஸ்டராவது மதிமாறனுக்கு ஒட்ட தெரியுமா?
அடுத்ததாக பெரியார் திகவினர் எங்கு மக்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் அவர்கள் போராடுகின்றனர். மக்கள் போராட்டத்தில் மக இ க பெரியார் திக இணைந்து போராடுகின்றனர்,
அவர்களுக்குள் சண்டையை ஏற்படுத்திவிட்டது சாச்சாத் மதிமாறினவரே உங்களைத்தான் சாரும்.
அவ்விரு அமைப்புகளின் கொள்கைகள் வேறாக இருந்தாலும் { மக இ க கொளைகள் எனக்கு தெரியாது , பெரியார் திக கொள்கைகள் சிறிதளவு தெரியும்) மக்களுக்காக போராட்டத்தில் முன்னின்று போர்ராடுகிறார்கள்,
வலைப்பூவில் வெட்டியாக எழுதும் சாரி நேரத்தை போக்கும் மதிமாறினவரே நீங்கள் நடத்திய போராட்டம்தான் என்ன ?
உங்கள் கருத்துதான் என்ன?
உங்கள் தீர்வுதான் என்ன ?
அது மதிமாறனுக்கே தெரியாது காபடன் விஜயகாந்த் போன்று எண்ண்கிரேன்.
வெட்டிப்பயலாகிய நானும் மதிமாறனை பற்றி எழுது எனது நேரத்தினை வீணடித்துவிட்டேன் என்று எண்ணுகிறேன்,
செவிடன் காதில் சங்கு ஊதினால் கூட அதிர்வுகள் எழும்,,
ஆனால் மதிமாறன் போன்ற ஒன்றுக்கும் உதவா தலைக்கனம் கர்வம் பிடித்த ஆட்களிடம் கூறினால் அது ஒரு கல்லைப்பார்த்து பேசுவதற்கு சமம் என்று எண்ணுகிறேன்,
ஒன்றுமே தெரியாதா என்னையும் எழுத தூண்டிய மதிமாறனுக்கு எனது நன்றிகள்.

3 comments:

மாசிலா said...

இதுபோன்ற தனி மனித தாக்குதல் அவசியம் தானா? கருத்துக்களை கருத்துக்களுடந்தான மோத விடவேண்டுமே தவிர, இப்படி ஒருவர் பெயர் குறிப்பிட்டு தனிப்பட்ட முறையில் அவரை தாக்கி எழுதுவது நாகரீகமற்றதே.

passerby said...

மதிமாறன் கருத்துகளுக்கு எதிர் கருத்துகள் சொன்னால் வெட்டிவேலை போய்விடும் எனப்பயமா?

மதிமாறன் எவரை படமாகபோட்டலென்ன? அவர் போட்ட இளையராசாப் படத்தைப்பார்க்கவா அவர் வலைபதிவை திறக்கிறார்கள?

என்ன சொல்கிறார் என்பதைப்பார்க்கத்தானே?

இளையராசாப் படம் கிடைக்காத அபூர்வமா?

மதியை வைத்து மதிமாறன் கருத்துகளுக்கு எதிர் கருத்துகளை நீங்கள் வைத்தால், படிக்க ரெடி.

Barari said...

peyarukku thakunthaarpol thaan ungal ezuththum amainthu irukkirathu.

Post a Comment