Sunday, September 13, 2009

இந்திய மார்க்சிஸ்டுகளின் கையில் தாஸ் காப்பிடல் போல் தமிழச்சியின் கையில் பெரியாரின் நூல்கள்

யூரோப்பை சேர்ந்த ஒரு பெண்ணின் வலைத்தளத்தினை காண நேர்ந்தது. தமிழச்சி என்று நண்பர்கள் சொல்லும் பொழுது ஒரு வேளை தமிழச்சி தங்கபாண்டியனோ என்று எண்ண நேர்ந்தது. பின்னர் கடந்த 8 மாதங்களாக நான் வலைப்பூக்களிலும் தமிழ்மணத்திலும் உலாவ நேர்ந்த பொழுதுதான் தெரிந்தது இப்பெண்மணி ரூம் போட்டு கணிணியில் எழுதும் பெண்மணி என்று.

பெரியாரின் நூல்களை வாங்குவதற்கு பணமும், படிப்பதற்கு அதிகப்படியான நேரமும் அப்பெண்மணிக்கு உள்ளது. அதனால் அவருக்கு ரூம் போட்டு கணிணியில் எழுதுவது டைம்பாஸ் வேலை.

ஆனால் என்னைப்போல பாமர மக்களுக்கு எழுதப்படிக்கவே தெரியாது. ஏதோ எங்களுக்கு தெரிந்த அளவு பெரியார் பற்றியும் புரட்சி பற்றியும் அறிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.

எழுதப்படிக்க தெரியாமல் , கூலி வேலைக்குச்சென்று வரும் பாமர மக்களாகிய எங்களிடம் பெரியாரியம் என்ற தீக்கங்கை பற்றவைத்ததில் தற்காலத்தில் இயக்குநர் சீமானுக்கு அதிகப்படியான பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க இயலாது.

கடந்த சில ஆண்டுகளில் சீமான் என்ற தீக்குச்சியால் பெரியாரியம் ஈழம் தமிழுணர்வு என்று வந்த பாமர மக்கள் பலர்.

தமிழச்சி அளவுக்கு ரூம் போட்டு பெரியாரியம் படிக்கும் சோம்பேறி இயக்குநர் சீமான் இல்லை. மக்களோடு மக்களாக மக்களுக்கு சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, தமிழுணர்வு போன்றவற்றை எடுத்துச் செல்பவர் இயக்குநர் சீமான்.

இயக்குநர் சீமானின் தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்து விமர்சிக்கும் தமிழச்சிக்கு சீமானின் மக்களுக்காக உழைத்த வாழ்வை பார்க்கும் பகுத்தறிவு ஏன் இல்லை....?

தமிழச்சிக்கு பகுத்தறிவு இருந்தால் கண்டிப்பாக இயக்குநர் சீமானை விமர்சிக்கமாட்டார்கள் என்பது எனது எண்ணம்.

இயக்குநர் சீமான் எங்களைப்போன்ற ஒரு பாமரக்கூட்டத்தினை சேர்ந்தவர். அவர் தமிழச்சியைபோல் 24 மணி நேரமும் நூல்களுக்குள் மூழ்கி நேரத்தினை வீணடிப்பவர் இல்லை.

மக்களுக்காக போராடும் நேரம் போக தனது மீதி நேரத்தில் நூல்கள் படிப்பவர்.

ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதமான மார்க்சியம் இந்தியாவிலுள்ள மார்க்ஸிஸ்( பார்ப்பனர்களின்) டுகளின் கையில் எப்படி பயனற்றதாக உள்ளதோ அதைப்போலத்தான் தமிழச்சியின் கையில் பெரியாரியம் என்பது பயனற்றதாக இருக்கிறது என்பது வெட்டிப்பாமரனாகிய எனது கருத்து.

தமிழச்சியே எண்ணிப்பாருங்கள் உங்களால் எத்தனைப்பேர் பெரியாரிஸ்ட்களாக மாறினார்கள் என்று..........................

"பூச்சியமா அல்லது ஒற்றைப்படை எண்ணிக்கையா....?"

ஆனால் இயக்குநர் சீமான் என்ற தீக்கங்கால் பெரியாரிய தீப்பந்தத்தை ஏந்தியவர்கள் பலர் என்பது உங்கள் தலைக்கனத்தினை விட்டுவிட்டு பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

தமிழச்சி அவர்களே உண்மையிலேயே பெரியாரின் கொள்கைகளை பரப்ப வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் அறையில் வீணாக கிடக்கும் நூல்களை அருகிலுள்ள நூலகத்துக்கு அளித்துவிடுங்கள்.

பகுத்தறிவு சிறிதளவாவது இருந்தால் வெட்டிப்பாமரனின் கருத்துக்கள் உங்கள் மண்டையில் சிறிதளவு பாய்ந்திருக்கும் என்று எண்ணுகிறேன்....

வெட்டித்தனமாய் ரூம் போட்டு நான்கு சுவருக்குள் fan ac காற்றில் அமர்ந்து களத்தில் செயற்படுபவர்களை விமர்சித்துக்கொண்டிருக்கும் வெட்டிவீணர்களைப்பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடரும் இந்த வெட்டிப்பாமரனின் சிந்தனையிலிருந்து.....................

2 comments:

தமிழ்பாலா said...

நண்பரே கம்யூனிஸ்ட்கள் கையில் டாஸ் கேப்பிட்டல்
என்று உதாரணம் சொல்கிறீரே அமெரிக்காவில் உயர்கல்வி மாணவர்களே டாஸ் கேப்பிட்டலைதூக்கிடும் காலம் வந்துவிட்டது இந்திய பொருளாதார மாற்றத்திற்கு தாங்கள் என்ன மாற்று வைத்திருக்கிறீர்கள் என்று செயல்படாமல் ,,செயல்படும் தோழமை இயக்கத்தவரை விமர்சித்து என்ன பயன் ?
தானும் செய்வதில்லை மற்றவ்ரையும் கொச்சைப்படுத்துவது ,எவரையோ விமர்சிப்பதற்கு யாரையோ ஜாடையாக சொல்வதை விட்டுவிட்டு , நேரடியாக எந்த கொமபனாக இருந்தாலும் விமர்சியுங்கள் உங்கள் உன்னத பணியை வரவேற்கிறேன்

மாசிலா said...

வெட்டிப்பாமர பயல் : //யூரோப்பை சேர்ந்த ஒரு "பெண்ணின்" வலைத்தளத்தினை காண நேர்ந்தது//- //இப்"பெண்மணி" ரூம் போட்டு கணிணியில் எழுதும் "பெண்மணி"// - //பெரியாரின் நூல்களை வாங்குவதற்கு பணமும், படிப்பதற்கு அதிகப்படியான நேரமும் அப்"பெண்மணிக்கு" உள்ளது//

ஐயா வெட்டிப்பாமர பயலே, உங்க தமிழச்சி அழிப்பு சிறப்பு சிந்தனை கட்டுரையில் நான்கு முறை அவர் ஒரு "பெண்மணி" என மெனக்கட்டு நினைவுகூர்ந்து எழுதி உங்களது கீழ்த்தரமான சாக்கடை கழிவுகளை விட அசிங்கமான ஆணாதிக்க திமிர்தனத்தை வெளிப்படுத்தி அவர்மீது உங்களுக்கு உள்ள பொறாமை வெறியை ஆசை தீர அரிப்பு போக ரணமாகும் அளவிற்கும் நன்றாக சொறிந்து விட்டுக்கொண்டது என்களை போன்ற சாதாரண அறிவாளிகளுக்கும் ரொம்ப இதமாகவே இருக்கிறது. அவர் ஐரோப்பாவில் (வசதியுடன்) வாழ்கிறவர் என்றும் மெனக்கட்டு எழுதி, அவர் இந்திய சமுதாயத்தைப்பற்றி பேசவோ எழுதவோ தகுதி அற்றவர் என்று சொல்லாமல் புரிய வைக்க எடுத்த உங்கள் அட்டகாச முயற்சியின் இராஜ தந்திரத்தை நாங்கள் நன்றாக இரசித்து மெச்சிக்கொண்டோம்.
கடைசியில், உங்கள் கட்டுரையை முழுதும் படித்து கரைத்து குடித்த பின் எங்கள் மனதில் மீதம் நின்ற கருத்து கணிப்புகள் கீழ் வருவனவே : தமிழச்சி போன்ற போன்ற கீழ்த்தரமான இரண்டாமதர பெண் இனத்தை சேர்ந்தவர்கள், கலயாணம் பண்ணினோமா, பிள்ளைகளை பெற்றோமா, அவர்களை பேணி வளர்ப்பதில் மட்டும் கவனத்தை செலுத்தினோமா, உயர்தர ஆணாதிக்க கணவன்மாருக்கு பணிவிடை செய்தோமா, வீட்டு வேலைகளை கவனித்தோமா, கணவனின் காம இச்சைகளின் நேரங்களில் குறி தூக்கிக்கொண்டு அறிப்பெடுக்கும் போதெல்லாம் சொறிந்து விட்டோமா என சந்தடி சப்தமில்லாமல் வாழ்வதே பெண்களுக்குறிய நல்லதொரு வாழ்க்கை என்பதை நாங்கள் நன்றாக கிரகித்துக் கொண்டோம். இந்த பொம்பளைங்களுக்கு பேச்சுரிமை கொடுத்ததே பெரிய தப்பு, அதில் வேறு இப்போது கண்டகண்டதை எழுதவேற ஆரம்பிச்சுட்டாங்க. இவங்களை வளர விடாம, முளையிலேயே கிள்ளி தூர எறிந்துவிடுவோம். இதைத்தான் செத்துப்போன வெள்ளைத்தாடி கிழவரும் சொல்லிப்புட்டு மண்டைய போட்டாரு. இன்னும் கேட்டாக்கா, தமிழின பொம்பளைங்க அத்தனை பேரையும் மாராப்பு போடாம அரை நிர்வாணமா வைத்திருக்கனும். அப்போதான் கெழவருடை ஆதமா சாந்தி அடையும். நம்மளை போன்ற உண்மையான தொண்டர்கள் இருக்கும்வரை கெழவருக்கு ஒரு அழிவும் வராது. வாழ்க பெரியார். வாழ்க நீங்கள், வாழ்க நான், வாழ்க நாம்.

ரொம்பவும் நன்றிங்க ஐயா.

Post a Comment