Saturday, July 11, 2009

திருவள்ளுவருக்கு நிகரானவரா சர்வக்ஞர்.....?

இன்று காலை நாளிதழ் படிக்கும் பொழுது பெங்களூரில் ஆகஸ்ட் 9 ஆம் திகதி திருவள்ளுவர் சிலை திறப்பு என்றும் ஆகஸ்ட் 13 ஆம் திகதி சர்வக்ஞர் சிலை திறப்பு என்றும் போட்டுள்ளது.

பண்டமாற்று போல் ஆக்கிவிட்டார்கள் திருவள்ளுவரை. எம்மதத்தினையும் சாராமல் உலக மக்கள் அனைவருக்கும் பொதுமறை தந்த வள்ளுவர் சிறுமைப்படுத்திவிட்டார்கள்.

சரி சிலைக்கு சிலை.


தஞ்சை விவாசாயிகளுக்கு விவசாயம் செய்ய அதைப் போல ஏதாவது பண்டமாற்று போல் தமிழக முதல்வர் செய்தால் நன்றாக இருக்கும்.

நெய்வேலி மின்சாரம் வேணும்னா காவிரி நீரை கொடுனு சொல்லலாம். ஆனால் நம்மாளு இப்படி சொல்லமாட்டாரே.

ஏனென்றால் நம்மாளுக்குதான் அங்கே உதயா ரீவி , தேஜா ரீவி என்று கன்னட தொலைக்காட்சித்தொழில்கள் ஓடுதே.

அதனால இந்த ஐடியா ஒத்து வராது விவசாயிகளுக்கு...

என்னோட வெட்டிப்பாமர சிந்தனையிருந்து வந்தத சொல்லுறேன்.

விவசாயிகள் அனைவரும் தமிழக முதல்வருக்கு நீரை வாங்கக்கோரிக்கை வைப்பதைவிடுத்து.

இந்திய இறையாண்மைக்கு பங்கம் வராத வகையில் காவிரி நீர் பாயும் அனைத்து பகுதிகளையும் கர்நாடக மாநிலத்திற்கே இணைத்துவிடக்கோரி மத்திய அரசிடம் வேண்டுகோள் வைக்கலாம்.

இந்த வேண்டுகோளுக்கு கண்டிப்பாக கர்நாடக மக்களும் அரசியல்வாதிகளும் உறுதுணையாக இருப்பார்கள்.

மத்திய அரசு , உச்ச நீதிமன்றத்தின் காவிரி நீர் பற்றிய தீர்ப்பையே காதில் வாங்கிக்கொள்ளாத வீரமிக்க கன்னடமக்கள் கண்டிப்பாக காவிரி நீர் வேண்டி நிற்கும் தமிழக விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் வீரத்தோடு போராடுவார்கள்.

தமிழ் மொழியில் குறிப்பிட்ட சதவீத அளவு சமஸ்கிருதம் கலந்ததுதான் கன்னடம் என்பதால் காவிரியாற்றங்கரை மக்கள் எளிதில் கன்னட மொழியினை கற்று கன்னடர்களாக மாறி உயிர்வாழலாம்.

தமிழ் மொழி , தமிழ் என்று இங்கு பேசும் அனைவரும் அதை வியாபார பொருளாக்கி வியாபாரம் செய்வதால் பாமர மக்கள் எலிக்கறி திங்கின்றனர்.

பாமர மக்களாகிய விவாசாயிகள் தமிழ் என்ற அடையாளத்தினை விட்டுவிட்டு கன்னடர்களாக மாறி மனிதர்களாக உயிரோடு வாழலாம்.

தமிழர்களாக இன்னும் நீங்கள் இருந்தால் உங்கள் அடுத்த தலைமுறை இருக்காது.

இதைப்போல மேற்கு பகுதி மாவட்டங்களை கேரளாவோடு இணைத்தால் கேரளா அரசு அப்பகுதி வாழ் மக்களுக்கு முல்லைபெரியாறு நீரை எளிதில் கொடுக்கும்

தனது மாநிலத்துக்கு தனது மாநில மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் கர்நாடக, கேரளா அரசுகள் உணர்வோடு பூர்த்தி செய்தே வருகிறது.

எனவே இந்த வெட்டிப்பாமரனின் சிந்தனைகள் கண்டிப்பாக மக்களுக்கு பயன்படுமென்றே எண்ணுகிறேன்.

தொடரும் வெட்டிப்பாமரபயலின் சிந்தனைகள்....

படிக்கிறவங்க கொஞ்ச நேரம் நமக்கு ஒதுக்கி பின்னூட்டம் போட்டு என் சிந்தனையை கொஞ்சம் தூண்டிவிட்டா நல்லா இருக்கும்...

4 comments:

யூர்கன் க்ருகியர்..... said...

1991 ஆம் ஆண்டே திறக்க பட வேண்டிய சிலை.
அப்படியானால் இதனை வருட தாமதத்திற்கு காரணம் ?
கன்னடர்களின் தமிழ் துவேசமா ? தமிழக தலைவர்களின் (?) அரசியலா அல்லது தமிழர்களின் மறதியா ??

யூர்கன் க்ருகியர்..... said...

கன்னட மொழி தோன்றுவதற்கு முன்பே வாழ்ந்த திருவள்ளுவரோடு ஒரு கன்னட கவிஞ்சரை ஒப்பீடு செய்வது>>> எல்லாம் நேரம் ... !

ஆ.ஞானசேகரன் said...

//இந்த வேண்டுகோளுக்கு கண்டிப்பாக கர்நாடக மக்களும் அரசியல்வாதிகளும் உறுதுணையாக இருப்பார்கள்.//

கண்டிப்பாக

chittoor.S.Murugeshan said...

ஏனிந்த தொட்டாற்சிணுங்கி தனம் ? காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று கேள்விப்பட்டதில்லையா? நீங்கள் இங்கே (தமிழ் நாட்டில்) இருக்கிறீர்கள். நீங்கள் (தேவி வார இதழ் கூட இதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளது) வெளியிடும் இது போன்ற கருத்துக்கள் அங்கு (கர்னாடகம்) வாழும் மக்களை எப்படி பாதிக்கும் என்று யோசித்து எழுதலாமே !

Post a Comment