Thursday, July 9, 2009

வலைப்பூவில் பிரசித்தி பெற என்ன செய்யலாம்?

நானும் வலைப்ப்பூ திரட்டி எல்லாத்தையும் இலங்கைல மக்கள் சாகுற நிலைமை அதிக ஆரம்பிச்ச இந்த 6 மாசமா பார்த்துக்கிட்டு வாரேன்.

எல்லாம் பெரிய பெரிய அறிஞர்களாவுலா இருக்காங்க வலைப்பூவுல.

சரி தலைப்புக்கு வரேன் . நான் கடந்த ஆறு மாசமா பார்த்ததுல இருந்து வலைப்பூவில் நம்ம வலைப்பூவ பிரசித்தி பெற வைக்க பிரபலமா இருக்குற வலைப்பூ கூட சண்டை போடுறது. அதாவது விமர்சனம் பண்ணி நம்மள விளம்பரப்படுத்திக்கிறது.

இல்லாட்டி பிரபலமா இருக்குற யாரையாவது திட்டுறது, விமர்சனம் பன்னுறது.

நம்ம கமென்ட்ஸ் களா அங்க போடாததுக்கு நம்ம வலைப்பூவில் அதை போட்டு சண்டை பிடிக்குறது.

இலங்கை தமிழர் பற்றி வலைப்பூவில் எழுதி பல பேர் பிரபலமானாங்க. ஆனா இப்ப ஒரு பேச்சையும் காணோம்.

இப்ப சீஸன் என்னனு எனக்குத்தெரியுல இருந்தா சொல்லுங்க நானும் கொஞ்சமாவது பிரபலாமாகிக்கிறேன்.

இல்லனா மகா நடிகன் சத்யராஜ் மாதிரிதான் நானும் வலைப்பூவ கொண்டு போனும் போல இருக்கு.

படிக்கிறவங்க கொஞ்சமாவது பின்னூட்டம் போட்டு எனக்கு பூஸ்ட் ஏத்திவிடுங்க.

11 comments:

Cable சங்கர் said...

ithellam paththaathu..

வெட்டிப்பயல் said...

ஐயா,
மூணு வருஷமா இந்த பேர்ல எழுதிட்டு வரேன். கொஞ்சம் பார்த்து செய்யுங்க. ரெண்டு பேர் ஒரே பேர்ல எழுதினா படிக்கறவங்களுக்கு குழப்பம் வரும் :(

rapp said...

sir/madam,

naanum idhe perla oru blog vechirukken http://vettiaapiser.blogspot.com/

adhaala, konjam paathu seinga plz.

SP.VR. SUBBIAH said...

///படிக்கிறவங்க கொஞ்சமாவது பின்னூட்டம் போட்டு எனக்கு பூஸ்ட் ஏத்திவிடுங்க. ////

பிடியுங்கள் 5 கிலோ பூஸ்ட் பாக்கெட்!
தெலுங்குப் பட விமர்சன்ம், மகாபாரதக் கதைகள் என்று உங்களுக்குத் தனிப்பட்ட பெயர் இருக்கிறது. அவற்றை எழுதுங்கள்!

துளசி கோபால் said...

வெட்டி,

தகவல் கிடைச்சால் எனக்கும் சொல்லுங்கப்பூ

வெட்டிப்பாமர பயல் said...

வலைப்பூ உறவுகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த வெட்டிப்பயல் இனி வெட்டிப்பாமர பயல் ஆகிட்டான்

ஜோ/Joe said...

ஏற்கனவே பிரபலமாயிருக்கும் ஒரு பதிவரின் பெயரிலேயே பதிவு ஆரம்பித்து பின்னர் அவர் வந்து வேறு பெயர் வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கச் செய்வதும் பிரபலமாவதற்கு ஒரு வழி ..என்ன அதை இங்கே பதிவில் சொல்லாமல் செய்தே காட்டியிருக்கீங்க :)

வெட்டிப்பாமர பயல் said...

நண்பர் ஜோ...

ஏற்கெனவே வெட்டிப்பயலுங்க இருப்பது எனக்கு தெரியாது. நான் அந்த அளவுக்கு வலைப்பூக்களையும் தமிழ்மணத்தையும் பார்த்தது இல்லை. நீங்களெல்லாம் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது ஏற்கெனவே பலர் எனக்கு கம்பெனி குடுக்க இருப்பது.

☀நான் ஆதவன்☀ said...

குட்...நன்றி வெட்டிபாமரப்பயல்

வெட்டிப்பயல் said...

மிக்க நன்றி பாஸ்

வெட்டிப்பாமர பயல் said...

பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் வெட்டிப்பாமரபயலின் நன்றிகள்

Post a Comment