Thursday, October 8, 2009
தமிழ்தேசியம் பற்றி பேசும் மதிமாறினவரின் தொடர்புள்ள ரி.ஆர்.ரி வானொலியின் காட்டுமிராண்டித்தனம்
ஈழத்துப்போராட்டத்தினை கொச்சைப்படுத்துபவர்களுடன் கூட்டு சேர்ந்து இணையதளத்தில் அனைவரையும் அறைக்குள் அமர்ந்து புரட்சி(டு..?) செய்கிறேன் என்ற பெயரில் குழப்பி வருபவர்கள் அம் மதிமாறினவர் என்பது அனைவரும் அறிந்ததே.
அவரது நட்பு ஊடகமான ரி.ஆ.ரி வானொலியின் தன்மையை பாருங்கள்:
ஈழநாடு ஆசிரியருக்கு கொலை மிரட்டல்!
திகதி: 08.10.2009 // தமிழீழம்
பிரான்சிலிருந்து வெளியாகும் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் சிவகுரு பாலச்சந்திரன் அவர்களுக்கு நேற்று மாலை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பல வாரங்களாக தமிழ் தேசிய ஆதரவு அரசியல் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவந்த திரு. சி. பாலச்சந்திரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி வானொலியில் சுவிஸ் நேரத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் நோக்கில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலைக் கண்டித்து அண்மையில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பாகவே இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று, புதன்கிழமை (07.10.2009) பாரிஸ் பாராளுமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற வழமையான ஒன்றுகூடலில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்த வேளை, அங்கு அவரை இடைமறித்த ரி.ஆர்.ரி. வானொலி உரிமையாளர் தர்சன் எனப்படும் சிறீரங்கன், அறிவிப்பாளர் ரவீந்திரன் ஆகிய இருவரும் அவரைத் தரக்குறைவாக ஏசியதுடன் தாக்குவதற்கும் ஈற்பட்டனர்.
அங்கு கூடியிருந்தவர்கள் இடையில் புகுந்து மறித்த போதும், அந்த இருவராலும் ஆசிரியர் பாலச்சந்திரன் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். ஏற்கனவே, கடந்த 30-09-2009 அன்று மாலையும் இதே போன்று தொலைபேசியிலும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
நன்றி: சங்கதி
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1740&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51
ஈழநாடு கட்டுரைகளை அதிகப்படியான தமிழர்களுக்கு தெரியும், உண்மைகளை தெளிவாக கூறி வருபவர் ஈழ நாடு ஆசிரியர்.
மதிமாறினவரின் உண்மை உருவை எடுத்துக்கூறவே இதை பதிவிட்டுள்ளோம்.
மதிமாறினவரின் ரி.ஆர்.ரி உறவின் ஆதாரம்: http://mathimaran.wordpress.com/trt-radio/
இது மட்டுமல்ல ஈழத்துக்கு எதிரான இன்னும் பல பேருடன் மதிமாறினவர் உறவுகொண்டுள்ளார்.. ஆதாரங்களுடன் விரைவில் இணைக்கப்படும்..........
Sunday, September 13, 2009
இந்திய மார்க்சிஸ்டுகளின் கையில் தாஸ் காப்பிடல் போல் தமிழச்சியின் கையில் பெரியாரின் நூல்கள்
பெரியாரின் நூல்களை வாங்குவதற்கு பணமும், படிப்பதற்கு அதிகப்படியான நேரமும் அப்பெண்மணிக்கு உள்ளது. அதனால் அவருக்கு ரூம் போட்டு கணிணியில் எழுதுவது டைம்பாஸ் வேலை.
ஆனால் என்னைப்போல பாமர மக்களுக்கு எழுதப்படிக்கவே தெரியாது. ஏதோ எங்களுக்கு தெரிந்த அளவு பெரியார் பற்றியும் புரட்சி பற்றியும் அறிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.
எழுதப்படிக்க தெரியாமல் , கூலி வேலைக்குச்சென்று வரும் பாமர மக்களாகிய எங்களிடம் பெரியாரியம் என்ற தீக்கங்கை பற்றவைத்ததில் தற்காலத்தில் இயக்குநர் சீமானுக்கு அதிகப்படியான பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க இயலாது.
கடந்த சில ஆண்டுகளில் சீமான் என்ற தீக்குச்சியால் பெரியாரியம் ஈழம் தமிழுணர்வு என்று வந்த பாமர மக்கள் பலர்.
தமிழச்சி அளவுக்கு ரூம் போட்டு பெரியாரியம் படிக்கும் சோம்பேறி இயக்குநர் சீமான் இல்லை. மக்களோடு மக்களாக மக்களுக்கு சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, தமிழுணர்வு போன்றவற்றை எடுத்துச் செல்பவர் இயக்குநர் சீமான்.
இயக்குநர் சீமானின் தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்து விமர்சிக்கும் தமிழச்சிக்கு சீமானின் மக்களுக்காக உழைத்த வாழ்வை பார்க்கும் பகுத்தறிவு ஏன் இல்லை....?
தமிழச்சிக்கு பகுத்தறிவு இருந்தால் கண்டிப்பாக இயக்குநர் சீமானை விமர்சிக்கமாட்டார்கள் என்பது எனது எண்ணம்.
இயக்குநர் சீமான் எங்களைப்போன்ற ஒரு பாமரக்கூட்டத்தினை சேர்ந்தவர். அவர் தமிழச்சியைபோல் 24 மணி நேரமும் நூல்களுக்குள் மூழ்கி நேரத்தினை வீணடிப்பவர் இல்லை.
மக்களுக்காக போராடும் நேரம் போக தனது மீதி நேரத்தில் நூல்கள் படிப்பவர்.
ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதமான மார்க்சியம் இந்தியாவிலுள்ள மார்க்ஸிஸ்( பார்ப்பனர்களின்) டுகளின் கையில் எப்படி பயனற்றதாக உள்ளதோ அதைப்போலத்தான் தமிழச்சியின் கையில் பெரியாரியம் என்பது பயனற்றதாக இருக்கிறது என்பது வெட்டிப்பாமரனாகிய எனது கருத்து.
தமிழச்சியே எண்ணிப்பாருங்கள் உங்களால் எத்தனைப்பேர் பெரியாரிஸ்ட்களாக மாறினார்கள் என்று..........................
"பூச்சியமா அல்லது ஒற்றைப்படை எண்ணிக்கையா....?"
ஆனால் இயக்குநர் சீமான் என்ற தீக்கங்கால் பெரியாரிய தீப்பந்தத்தை ஏந்தியவர்கள் பலர் என்பது உங்கள் தலைக்கனத்தினை விட்டுவிட்டு பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
தமிழச்சி அவர்களே உண்மையிலேயே பெரியாரின் கொள்கைகளை பரப்ப வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் அறையில் வீணாக கிடக்கும் நூல்களை அருகிலுள்ள நூலகத்துக்கு அளித்துவிடுங்கள்.
பகுத்தறிவு சிறிதளவாவது இருந்தால் வெட்டிப்பாமரனின் கருத்துக்கள் உங்கள் மண்டையில் சிறிதளவு பாய்ந்திருக்கும் என்று எண்ணுகிறேன்....
வெட்டித்தனமாய் ரூம் போட்டு நான்கு சுவருக்குள் fan ac காற்றில் அமர்ந்து களத்தில் செயற்படுபவர்களை விமர்சித்துக்கொண்டிருக்கும் வெட்டிவீணர்களைப்பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடரும் இந்த வெட்டிப்பாமரனின் சிந்தனையிலிருந்து.....................
Friday, August 28, 2009
குழப்பல்வாதி மதிமாறனும் சாதீயமும்
Monday, July 27, 2009
தமிழினத்தினை கெடுக்கும் தமிழ் வியாபாரிகள்: மைக் செட் பார்ட்டி
தமிழ்தேசியம் என்று ஏட்டிலே அதிக நாளாக எழுதிக்கொண்டிருந்தவர். இவருக்கும் மற்றவர்களை விமர்சனம் செய்து முன்னேற நினைப்பதே வேலை.
ஓராண்டுக்கு முன்பு வரை இங்குள்ள தமிழ்தாத்தாவுடன் இணைந்து தங்களை விளம்பரப்படுத்திக்கொண்டவர். பின்னர் தமிழ்தாத்தாவுடன் இருந்தால் நாம் வளர இயலாது என்பதை தெரிந்துகொண்டு அவரை விட்டுப்பிரிந்து வேறொரு குதிரையை தேடினார்.
இப்பொழுது அவர் இருக்கும் குதிரையை தமிழ்தாத்தாவுடன் இருக்கும் பொழுது தமிழ்தாத்தாவுடன் இணைந்து விமர்சனம் செய்து பெரியாரியம் சரியானது அல்ல. திராவிடம் என்பதே தவறானது என்றவர்.
இப்பொழுது அந்த திராவிடம் பேசும் குதிரையின் சவாரியில் ஏறியுள்ளார். திராவிடம் கூடாது, பெரியாரியம் தவறானது சொல்லுவார் ஆனால் அவருக்கு விளம்பரம் வேண்டுமென்றால் பெரியார் சொன்ன கருத்துக்களை பேசுவார்.
ஏன் இப்படி அந்த மைக் செட் பார்ட்டி குழப்புறாருனு பார்த்தா அவர் அமைப்பின் செயலாளரும் ஒரு வெங்கட பார்ப்பனர்தான் என்று வலைப்பூக்களின் நான் படித்ததில் கிடைத்தது.
பார்ப்பானர்ங்க தங்கட வேலையை சரியா செய்றாங்க.
இந்த மைக்செட் பார்ட்டிகிட்ட பணம் மட்டும் இருக்கு ஆளுங்க இல்லை. மைக்செட் கு பணம் கொடுத்து இவரோட அமைப்பு பேர்ல நிகழ்ச்சி நடத்த மற்ற அமைப்பினர்கிட்ட கேட்டுருக்கார்.
அப்படி மைக்செட் போட்ட கூட்டத்தால ஆள் இப்ப பெரிய ஆள் ஆகிட்டார் தன் மனசுக்குள்ள.
அந்த கூட்டதுக்காக உழைச்சது வேறு அமைப்பினர். அந்த கூட்டதுக்காக உழைத்ததில் ஒருவர் அப்பகுதியின் திராவிட இயக்கமொன்றின் முக்கிய பொறுப்பாளர். இதை கேள்விப்பட்ட அந்த திராவிட அமைப்பின் தலைவர் அந்த நபரை அமைப்பிலிருந்தே நீக்கிட்டதாவும் சொன்னாங்க.
முத்துக்குமரன் என்று ஒருத்தர் செத்தார். அதுல பல பேர் அவர் பேர்ல கடை மாதிரி அமைப்பு ஆரம்பிச்சு தங்களுக்கு தாங்களே பொறுப்பு போட்டுட்டாங்க.
அதுல ஒன்னு இந்த மைக் செட் பார்ட்டியோடதும். இந்த மைக் செட் பார்ட்டி கொஞ்சம் வித்தியாசமா செல்போன் குறுஞ்செய்தி பரப்புரைனு ஆளுக்கு 100 ரூவாய்னு கறந்துட்டாங்க, அப்படியே முத்துக்குமாரனுக்கு மணிமண்டபம் னு பணத்தினை திரட்ட ஆரம்பிச்சிட்டாங்க இணையதளத்திலும் திரட்டினாங்க.
அதுக்கப்புறம் அது என்னாச்சுனு தெரியலை.
இதைப்பற்றி பேசுறப்ப பசங்க சொன்னாங்க இதே மாதிரி இந்த மைக் செட் பார்ட்டி ஏற்கெனவே ஈழத்துக்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு தீக்குளித்து மரணமடைந்த இஸ்லாம் மதத்தில் பிறந்த தமிழனுக்கு மணிமண்டபம் கட்டுரேனு பணம் திரட்டுனாங்களாம்.
அதுக்கப்புறம் அந்த மணிமண்டபம் என்ன ஆச்சுனு எங்களுக்கு தெரியலைனு சொன்னாங்க.
எதோ கண்ணோடட்மா இருந்தாரு இவரோட கண்ணோட்டம் பிடிக்காம கண்ணோட்டம் இவர் கையை விட்டுப் போச்சு.
இந்த மைக் செட் பார்ட்டியோட பந்தா நான் சொன்னதவிட ரொம்ப ரொம்ப அதிகம் .
அந்த மைக்செட் பார்ட்டி என்ன சொல்லவர்ராருனு யாருக்கும் புரியலை.
தமிழ்நாட்டில் இருக்கும் சாதி பிரச்சினை பக்கம் எட்டிக்கூட பார்க்காமாட்டாங்க, ஏனா அந்த தாழ்த்தப்பட்ட மக்களிடம் பணமில்லையே. தமிழ்நாட்டிலுள்ள மக்களுக்காக போராட மைக் செட் பார்ட்டி ஈழப்பிரச்சினைல எப்படி இப்படினு நீங்க யோசிச்சாலே தெரியும்.
விரைவில் இன்னும் தெளிவா வரும்.
இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா எல்லா அமைப்புகளையும் படிச்சுகிட்டு வர்ரேன்,
Thursday, July 23, 2009
தமிழினத்தினை கெடுக்கும் தமிழ் வியாபாரிகள்: ஆய்வு 2 - சித்திர வியாபாரி
வணக்கம் நண்பர்களே
ஆய்வு 1 இல் எனக்கு தெரிந்த வெட்டிப்பாமரனின் சிந்தனைகளை வெளியிட்டேன்.
இப்பொழுது ஆய்வு 2 - சித்திர வியாபாரி பற்றி எனக்கு தெரிந்ததை இங்கு எழுத உள்ளேன்.
சென்னையில் உலகப் புகழ் ஓவியரின் கருப்பு யூலை ஓவியக் கண்காட்சி நடைபெறுவதாக இணையத்தில் படித்தேன்.
அவரது சித்திரவியாபாரத்தினை பலருக்கு தெரிந்திருக்கும் நான் அறிந்ததை இங்கு கூறுகிறேன்.
சில திங்கள்களுக்கு முன்னர் மென்பொருள் ஊழியர்கள் நடத்திய உண்ணாநிலைப்போராட்டத்தில் அவ்வியாபாரியின் உண்மை முகம் வெளிப்பட்டது. அதைப்பற்றி கீற்று தளத்தில் நண்பர் ரமேஷ் அவர்கள் விரிவாக எழுதியுள்ளார்கள்.
அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நண்பர்கள் சிலரின் வற்புறுத்தலாலோ அல்லது மிரட்டலாலோ ரமேஷ் கூறியது தவறான செய்தி என்று வெளியிட்டார்கள்.
கீற்று ரமேஷின் கட்டுரையை பின்னால் இணைத்துள்ளேன்.
இதற்கு முன்பாக அந்த சித்திர வியாபாரி ஈழத்தில் புதுக்குடியிருப்பு என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பொழுது தமிழகத்தில் நெடுநாளாக ஈழப்போராட்டத்துக்கு வேர் போல் செயல்பட்டுவரும் இருவரை பற்றி ஈழத்தமிழர்கள் மத்தியில் அவதூறான கருத்துக்களை கூறியுள்ளார்.
அவ்வேர்கள் வெளியே ஈழத்தமிழர்களுக்கு தெரியாது என்று நினைத்திருப்பார் போலும் , வேர்கள் மறைந்திருந்தாலும் என்றும் அதன் தன்மை வெளிப்பட்டுக்கொண்டே இருக்குமென்று அவ்வியாபாரிக்கு தெரியவில்லை.
புதுக்குடியிருப்பு மட்டுமில்லாது வெளிநாட்டுக்கு சென்ற பல இடங்களிலும் சொல்லியிருக்கிறார் " அந்த நபர்கள் தமிழர்கள் இல்லை , அவர்கள் தெலுங்கர்கள் அவர்களை நம்பாதீர்கள் " என்று சொல்லியுள்ளார்.
அவர் கூறிய நபர்களில் ஒருவர் 1992 காலகட்டம் தொடக்கம் ஈழமக்களுக்காக 5 1/2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தவர்.
மற்றொரு நபர் 3.5 ஆண்டுகளுக்கும் மேலாக அக்காலத்தில் இருந்தவர். மேலும் தற்பொழுதும் அவர் ஈழமக்களுக்காக சிறையில் இருப்பவர்.
இப்படிப்பட்ட நபர்களை பற்றி பேசுவதற்கு இந்த சித்திரவியாபாரிக்கு அருகதை உண்டா.....?
அந்த தமிழுணர்வாளர்களைப்பற்றி வெளிநாட்டிலெல்லாம் தரக்குறைவாக பேசிவிட்டு அந்த இருவரிடமும் தனது ஓவியக்கண்காட்சியை போடுவதற்கு ஏற்பாடு செய்ய தொலைபேசியில் கேட்டுள்ளார்.
அந்த தமிழுணர்வாளர்கள் அவரை போடலாம் நேரில் வாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
நேரில் வந்த அந்த ஓவியர் அந்த தமிழுணர்வாளர்களின் அலுவலகத்தில் வந்து விழிபிதுங்க அவர் பட்டபாட்டை வார்த்தைகள் சொல்ல இயலாது.
ஆதாரத்தோடு அத்தமிழுணர்வாளர்கள் கேட்ட கேள்வியால் அந்த சித்திர வியாபாரி எனக்கு இங்கு கண்காட்சியே வேண்டாமென்று ஓடிவிட்டார்.
கீற்று நந்தனின் கட்டுரை:
http://www.keetru.com/literature/essays/nandhan_1.php
ஈழத்தமிழர்களே! இனவுணர்வு வியாபாரி (ஓவியர்) புகழேந்தி வருகிறார்... உஷார்!!
'கீற்று' நந்தன்
கிராமத்தில் அம்மா கோழிகளுக்குத் தீவனமிடுவதைப் பார்த்திருக்கிறேன். கோழிகளை அழைப்பதற்கு என்றே பிரத்தியேகமான சத்தமொன்றை வைத்திருப்பாள். அந்த சத்தத்தைக் கேட்டவுடன் கோழிகள் தத்தமது குஞ்சுகளுடன் ஓடிவரும். அம்மா தரையில் விசிற விட்டிருக்கும் தானியங்களை ஆர்வமாக பொறுக்கித் தின்னும். சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு அம்மா உள்ளே சென்று விடுவாள். அந்த நொடிக்காகவே காத்திருந்ததுபோல எங்கிருந்தோ சில காக்கைகள் பறந்து வரும்; கோழிகளுக்கு இடப்பட்டிருந்த தானியங்களை ஓரமாக நின்று கொத்த ஆரம்பிக்கும். கோழிகள் இதைப் பார்க்காதவரை காக்கைகள் திருட்டுத்தனமாக தீவனத்தை தின்றுகொண்டிருக்கும். ஏதாவது ஒரு கோழி இதைப் பார்த்து, லேசாக ஓர் அசைவு மேற்கொண்டாலே போதும், காக்கைகள் பறக்க ஆரம்பித்துவிடும். அத்தகைய காக்கைகளில் ஒருவர்தான் ஓவியர் புகழேந்தி.
Pukalenthi இந்த இனமானப் புலியின் ‘ஈழத்தமிழர்கள் பாசத்தைத்தான்’ இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இனவுணர்வை விற்று காசு பார்க்கும் வேஷத்தை அண்மையில்தான் அறிய முடிந்தது.
ஈழத்தமிழர்களின் மீதான இனப்படுகொலையை நிறுத்தக்கோரி தகவல்தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தோம். எந்த அரசியல் பின்புலமும் இல்லாத, ஈழத்தமிழர்களின் மீதான சகோதர உணர்வினால் உந்தப்பட்டு நடந்த போராட்டம் அது. ஈழப்பிரச்சினையின் வரலாறு, சிக்கல்கள், துயரங்கள் ஆகியவற்றை இந்தத் தலைமுறை இளைஞர்கள் உணரும் வகையில் நிகழ்ச்சி நிரல்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. பழ.நெடுமாறன், இராசேந்திர சோழன், பேரா.கல்யாணி, சுபவீ, தியாகு, விடுதலை இராசேந்திரன், ஜெகத் கஸ்பார், சீமான், அருள்மொழி உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சி.மகேந்திரன் (சிபிஐ), உமாபதி (திமுக), திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), வைகோ (மதிமுக) ஆகிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்.
இந்தப் போராட்டத்தின் பிறிதொரு நிகழ்வாக, போராட்ட இடத்தில் ஈழப்பிரச்சினையை மையமாக வைத்து ‘தொடர் ஓவியம் வரைதல்’ என்ற நிகழ்வையும் நடத்த இளைஞர்கள் விரும்பினார்கள். இதற்கு யாரை அணுகலாம் என்று தோழர் தியாகுவை, போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்த நண்பர்கள் கேட்டார்கள். அவர் வீரசந்தானம், புகழேந்தி பெயர்களைப் பரிந்துரைத்தார். நண்பர்கள் புகழேந்தியைப் போய் பார்த்தனர்.
அவர் தனது வீரப்பிரதாபங்களை மூன்று மணி நேரம் பேசியிருக்கிறார். பேச்சின் முடிவில், ‘போராட்ட இடத்தில் வரைந்தால், சத்தம் அதிகமாக இருக்கும்; ஓவியம் நன்றாக வராது. நான் இங்கேயே வரைந்து கொண்டு வருகிறேன்; மொத்தம் ரூ.10,000 செலவாகும்’ என்று கூறி அந்தத் தொகையையும் சில நாட்களில் வாங்கியிருக்கிறார். நல்லவேளை, எங்காவது வெளிநாட்டிற்குப் போய் உட்கார்ந்தால்தான் நல்ல பாடல்கள் வரும் என்று சினிமா இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் தயாரிப்பாளர்கள் தலையில் மிளகாய் அரைப்பதைப் போல அரைக்கவில்லை. இவர்களிடம் இதற்கு மேல் கறக்க முடியாது என்ற நினைத்தாரோ என்னவோ பத்தாயிரத்தோடு நிறுத்திவிட்டார். இத்தனைக்கும் அரசுக்கல்லூரியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.
‘புகழேந்தி என்பது காரணப்பெயர்தான். எப்போதும் தனது புகழை தானே ஏந்திக்கொண்டு திரிவதால் அப்படிப் பெயர் இருப்பது முற்றிலும் பொருத்தமே’ என்ற ஒரு பேச்சு அவரை அறிந்தவர்கள் மத்தியில் இருப்பதோ, கடந்த ஆண்டு அவர் வேலை பார்க்கும் அரசு கவின்கலைக் கல்லூரியில் மாணவர்கள் ஒரு வாரம் நடத்திய போராட்டத்தின் கோரிக்கைகளில் ஒன்று - ‘புகழேந்தியை இடமாற்றம் செய்யவேண்டும்’ என்பதோ தகவல்நுட்பத் துறை இளைஞர்களுக்குத் தெரியாது. மாநாடுகள், போராட்டங்களில் ஓவிய நிகழ்வு எவ்வாறு இருக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. அதனால் புகழேந்தியை முழுக்க நம்பினார்கள்.
உண்ணாவிரதப் போராட்டத்தின் முதல்நாள் புகழேந்தியின் ஓவியம் வரவில்லை. இரண்டாம் நாள் ஓவியம் வந்தது. கூடவே அவரும். ‘ஓவியம் இன்னும் ஈரம் காயவில்லை’ என்று கூறி, அதை பார்வைக்கு வைத்தார். மாலையில் அவரது மாணவர்களை அனுப்பி அதே ஓவியத்தை திரும்ப எடுத்துக் கொண்டார். ஓவியம் எங்களுக்கு வேண்டும் என்று நண்பர்கள் சிலர் கேட்டபோது, ‘இவ்வளவு பெரிய ஓவியத்தை உங்களால் பாதுகாக்க முடியாது; இதை நான் கண்காட்சிகளில் வைக்கப் போகிறேன்’ என்று காரணம் கூறினார்.
உள்ளேயிருந்த பூனை வெளியே வந்துவிட்டது. கிராமப்புறங்களில் ஒரு சொலவடை உண்டு, ‘ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே’ என்று. இவர் ஓவியக் கண்காட்சி வைப்பதற்கு, ஊரில் உள்ளவர்களை ஏமாற்றி காசு கறந்திருக்கிறார்.
பிரச்சினைகளைச் சார்ந்து நிகழ்த்தப்பட்ட பல்வேறு ஓவிய நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றிருக்கிறேன். அந்த நிகழ்வுகளுக்கெல்லாம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஓவியப் பலகை, தூரிகை என தேவையான பொருட்களை வாங்கி வைத்திருப்பார்கள். ஓவியர்கள் மருது, விஸ்வம், நெடுஞ்செழியன் என பிரபல ஓவியர்கள் யாரேனும் வந்து ஓவியம் வரைவார்கள். பிரச்சினைகளைச் சார்ந்த தங்களது உணர்வினை வெளிப்படுத்துவார்கள். மக்களுக்காக வரையப்பட்ட அந்த ஓவியங்கள் மக்களுக்கானதே என்ற எண்ணத்தோடு, தாங்கள் வரைந்த ஓவியங்களை நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அந்த ஓவியர்கள் யாரும் அதை அளப்பரிய செயலாக பெருமை பேசுவதில்லை; தங்களது சமூகக் கடமைகளில் ஒன்றாகவே அதைக் கருதி அடுத்த வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள்.
ஆனால் தமிழினத்திற்காக வேலை பார்ப்பதையே தனது பிறவி இலட்சியமாகக் கூறிக் கொண்டு திரியும் புகழேந்தி, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தனது புகழ் பாடுவதற்கும், அதையே முதலீடாக வைத்து பணம் சம்பாதிப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார்.
I.T. ஆட்கள் என்றால் 5000 ரூபாய் வாடகையை 10000 ரூபாயாக ஏற்றிச் சொல்லும் வீட்டுத் தரகர்களுக்கும், 10 ரூபாய் பொருளை 100 ரூபாய்க்கு விற்கும் கடைக்காரர்களுக்கும் புகழேந்திக்கும் பெரிய வித்தியாசமில்லை. அவர்களையாவது ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம், இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். ஆனால் புகழேந்தி பேசுவது தமிழர் விடுதலை, கொள்ளையடிப்பது தமிழர்களின் பணம்.
புகழேந்தியின் இந்தச் செய்கை குறித்து தெரிந்தபின்பு, பணம் கொடுத்த நண்பர்களிடம் இது குறித்துப் பேசினேன். ‘புகழேந்தி நம்மை ஏமாற்றியிருக்கிறார். ஒன்று நாம் பணத்தை வாங்க வேண்டும் அல்லது ஓவியத்தையாவது அவர் தர வேண்டும்’. ‘எப்படிக் கேட்பது?’ என நண்பர்கள் தயங்கினார்கள். அதன்பின்பு புகழேந்தியை நானே தொடர்பு கொண்டு பேசினேன்.
“ஒரு ஓவியத்திற்கு 10,000 ரூபாய் என்பது அதிகம். போராட்டத்திற்கான செலவு அதிகமாகி விட்டது. மொத்த செலவில் நான்கில் ஒரு பங்கு உங்களுக்கே ஆகியிருக்கிறது. ஒரு ஓவியத்திற்கு நிச்சயம் இவ்வளவு ஆகாது. எனவே மீதிப் பணத்தைக் கொடுத்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்”
“மீதியா? மொத்தம் 13,500 ரூபாய் ஆகியிருக்கிறது. என் கையிலிருந்து 3500 ரூபாய் போட்டிருக்கிறேன்.”
“13,500 ஆகியிருக்கிறது என்றால், அதற்கான செலவுக்கணக்கை கொடுங்கள். மீதிப்பணத்தைக் கொடுத்து ஓவியத்தை எடுத்துக் கொள்கிறோம்.”
“நீங்கள் என்னிடம் பணம் கொடுக்கவில்லை, பணம் கொடுத்தவர்கள் வந்து கேட்கட்டும். நான் பேசிக் கொள்கிறேன். ஓவியத்தை திருப்பிக் கொடுப்பது குறித்து யோசித்துச் சொல்கிறேன். அந்த ஓவியத்தை நீங்கள் என்ன பண்ணப் போகிறீர்கள்?”
“நாங்கள் அடுத்தடுத்த போராட்டங்களின்போது அந்த ஓவியத்தை பயன்படுத்தவிருக்கிறோம். பின்னர் ஓவியத்தை நல்ல விலைக்கு விற்க முடிந்தால், அதை ஈழ அகதிகள் முகாமிற்கு கொடுக்கவிருக்கிறோம்.”
“இந்த ஓவியத்தை அப்படியெல்லாம் பயன்படுத்த முடியாது. ரொம்பவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். வெளியிடங்களுக்கு கொண்டு சென்றால் அதன் மெருகு குறைந்துவிடும். இதை உங்களால் பாதுகாக்க முடியாது.”
“அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஓவியத்தை பத்திரமாகப் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு.”
“யோசித்துச் சொல்கிறேன்.”
Pukalenthi “நாளை அல்லது நாளை மறுநாள் உங்களிடம் பணம் கொடுத்த நண்பர்களோடு வருகிறேன். செலவுக்கணக்கை கொடுங்கள். வரவு செலவுக் கணக்கு பார்க்க எங்களுக்கு அது தேவை.”
அதோடு எங்கள் உரையாடல் முடிந்தது. உடனே தியாகுவுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். ‘முதலில் இரண்டு பேர் பேசினார்கள். இப்போது யாரோ ஒருத்தர் கணக்கு கேட்கிறார். நீங்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்’ என்று பதறியிருக்கிறார். தோழர் தியாகு என்னைத் தொடர்பு கொண்டு, புகழேந்தி பேசியதைக் கூறினார்.
“இரமேஷ்! இது சம்பந்தமாக நீங்கள் வேறு யாரிடமாவது பேசினீர்களா?”
“ஆமாம். கவிஞர் ஜெயபாஸ்கரனிடம் பேசினேன்.”
“அவர் என்னிடம் பேசினார்; பின்பு வீரசந்தானம் பேசினார். செய்தி இப்படி வெளியே போய்க் கொண்டிருக்கிறது.”
“தெரியட்டும் ஐயா! புகழேந்தியின் உண்மை முகம் எல்லோருக்கும் தெரியட்டும். இனவுணர்வாளர் என்று நம்பி வந்தவர்களை ஏமாற்றி, இவர் காசு பறிப்பது உலகுக்குத் தெரிந்தால் நல்லதுதானே!”
“ஏமாற்றினார் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”
“போராட்டக் களத்தில் எப்படி ஓவியம் வரைவார்கள் என்பது எங்களது நண்பர்களுக்குத் தெரியாதபோது, அவர்களை வழிநடத்துவதை விட்டுவிட்டு, அவர்களது அறியாமையைப் பயன்படுத்தி 10,000 ரூபாய் வாங்கியதை ஏமாற்றுத்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது? படித்தவர்களையே இவர் இப்படி ஏமாற்றுகிறார் என்றால், உணர்வாளர் என்று இவரை நம்பி, விஷயம் தெரியாத, படிக்காத அப்பாவிகள் யாராவது வந்தால் இவர் எந்தளவிற்கு ஏமாற்றுவார்?”
“என்ன நடந்தது என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. நான்தான் வீரசந்தனம், புகழேந்தி பெயர்களைப் பரிந்துரைத்தேன். அவர்கள் புகழேந்தியைப் பார்த்திருக்கிறார்கள். அவர் என்ன பேசியிருக்கிறார், எவ்வளவு காசு வாங்கியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. இதை நாம் உட்கார்ந்து பேசுவோம். அதுவரை யாரிடமும் இதுகுறித்துப் பேசாதீர்கள்”.
புகழேந்தியிடம் செலவுக்கணக்கு கேட்கலாம் அல்லது ஓவியத்தை வாங்கலாம் என்று நண்பர்களை அழைத்தபோது அவர்கள் மிகவும் தயங்கினார்கள். ‘கொடுத்த காசை எப்படி கேட்பது? 10,000 ரூபாய் ஆகும் என்று சொல்லித்தானே வாங்கினார்?’ என்றார்கள்.
‘ஓவியம் வரைய எவ்வளவு ஆகும் என்று உங்களுக்குத் தெரியாதபோது, அதிகமாக சொல்லி பத்தாயிரம் ரூபாய் வாங்கியதே முதல் தப்பு. அப்படி வாங்கிக் கொண்டு, வரைந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு போனது இரண்டாவது தப்பு. இப்போது எல்லாம் தெரிந்தபின்பு, சால்ஜாப்பு சொல்வது அதை விட பெரிய தப்பு.
இவை எல்லாவற்றையும் விட அவரிடம் பணமோ, ஓவியமோ வாங்க வேண்டியதற்கு வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது. சமூகத்தின் அநீதிகளை கண்டுப் பொறுக்காமல், அதை தட்டிக் கேட்கிற எண்ணத்துடனோ, அல்லது இருக்கிற சமூக அமைப்பை மாற்றியமைக்கிற நோக்கத்துடனோ நாம் வீதிக்குப் போராட வருகிறோம். அப்படி போராட வருகிற நம்மையே ஒருவர் ஏமாற்ற அனுமதிக்கிறோம் என்றால் அது நாம் போராடுவதற்கான நியாயத்தையே காலி செய்துவிடுகிறது’ என்று கூறினேன்.
நண்பர்கள் ரொம்பவும் நல்லவர்களாக இருந்தார்கள். ரொம்பவும் தயங்கினார்கள். என்னுடன் வருவதற்கு சம்மதிக்கவில்லை. அதன்பின்பு யாரும் இதுகுறித்து பேசவுமில்லை. புகழேந்தி ஓவியத்தைத் திருப்பித் தரவுமில்லை; செலவுகணக்கை சொல்லவும் இல்லை.
எனது நண்பர்களை ஒருவர் ஏமாற்றியதை அப்படியே விட்டுவிட என்னால் முடியவில்லை. அதன்பின்பு விசாரித்தபோதுதான் தெரிந்தது, புகழேந்தி கூடிய விரைவில் ஐரோப்பிய நாடுகளில் ஓவியக் கண்காட்சி நடத்தவிருக்கிறார் என்று.
இப்போது எல்லாம் புரிந்தது. ஓவியக்கண்காட்சிக்கான ஓவியங்களை அவர் தயார் செய்து கொண்டிருந்திருக்கிறார். அந்த ஓவியங்களில் ஒன்றை, உண்ணாவிரதம் இருந்த இடத்திற்குக் கொண்டு வந்து வைத்துவிட்டு, திரும்பவும் அதை எடுத்துப் போய்விட்டார். இதற்கு எங்கள் மீது அவர் சுமத்திய பில் தொகை ரூ.10,000. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து ஊரெல்லாம் போராட்டம் நடத்துகிறார்கள்; புகழேந்தி அதை வைத்து காசு சம்பாதித்திருக்கிறார். ஈழத் தமிழர்களின் இரத்தத்தில் குளிர்காய்ந்திருக்கிறார்.
புகழேந்தியின் செய்கையைப் பார்க்கும்போது, ஆழிப்பேரலை தமிழகத்தைத் தாக்கியதே - அப்போது கரையோரங்களில் ஒதுங்கிய உடல்களில் இருந்த தங்க நகைகளை ஒரு சிலர் கொள்ளையடித்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
அவர் இதை மறுப்பாரேயானால் தயது செய்து கீழ்க்காணும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லட்டும்.
1. போராட்ட இடத்தில் ஓவியம் வரைதல் என்பது எப்படி இருக்கும் என்று புகழேந்திக்குத் தெரியாதா? முதல்முறையாக போராட வீதிக்கு வந்திருப்பவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, நான் ஸ்டுடியோவில் வரைந்து அதை எடுத்து வருகிறேன் என்று கூறியது ஏன்?
2. ஓவியம் வரைவதற்குத் தேவையான பொருட்களை விற்கும் கடையில், 10X5 அளவிலான ஓவியத்தை வரையத் தேவையான பொருட்களின் விலையை விசாரித்தபோது 1500 ரூபாய்தான் ஆகும் என்று தெரிந்தது. வேறொரு ஓவியரிடம் விசாரித்தபோது அவரும் அதை உறுதிப்படுத்தினார். அப்படியிருக்க புகழேந்தி 10,000 ரூபாய் வாங்கியது ஏன்? கொஞ்சம் விவரம் தெரிந்தவர்கள் கேட்டால், நீங்களா என்னிடம் காசு கொடுத்தீர்கள் என்று மடக்குவார். நாங்கள் பேசாமல் போகவேண்டும்? சென்னைக்குப் புதிதாக வருபவர்களிடம், ஒரு கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு 100 ரூபாய் வாங்கும் ஆட்டோ டிரைவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
3. போராட்டங்களின்போது வரையப்படும் ஓவியங்களை, எந்த ஓவியரும் எடுத்துக் கொண்டு போகமாட்டார் என்பது புகழேந்திக்குத் தெரியாதா? தெரியாது என்றால், பொதுப்பிரச்சினைக்காக இதுவரை எந்தவொரு போராட்டத்திலும் அவர் ஓவியம் வரைந்ததில்லையா? இல்லை மக்களுக்காக வரைகிறேன் என்று அவர் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் பொய்யா?
4. ஓவியத்தை உங்களால் பாதுகாக்க முடியாது என்று சொல்லும் காரணம் சொத்தையானது. பாதுகாக்க முடியாது என்றால், அப்படிப்பட்ட ஓவியத்தை வரைந்தது ஏன்? போராட்ட இடத்தில் வைப்பதற்குத்தான் நம்மை நாடி வந்திருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும்தானே?
5. வரைந்தார், கொண்டுவந்து காண்பித்தார், திரும்பவும் எடுத்துக் கொண்டு போனார் என்றால், அதற்கு எதற்கு 10,000 ரூபாய்? போராட்ட இடத்தில் 8 மணி நேரம் வைத்து இருந்ததற்கு, 10,000 ரூபாய் மொய்ப்பணம் என்கிறாரா?
6. நெடுமாறன், இராசேந்திர சோழன், தியாகு, சுபவீ, சீமான், ஜெகத் கஸ்பார் ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். அவர்கள் எல்லோரும் கருத்துக்களைத் தந்தார்கள். நீங்கள் ஓவியத்தைத் தந்தீர்கள். அவர்கள் ஒரு பைசா கூட வாங்கவில்லை. நீங்கள் பணம் வாங்கினீர்கள். அவர்கள் இனவுணர்வாளர்கள் என்றால், நீங்கள் இனவுணர்வு வியாபாரியா? நீங்கள் விற்பனை செய்வதற்கு ஈழத்தமிழுணர்வுதானா கிடைத்தது?
7. ஆதரவற்ற குழந்தைகளுக்காக கலைநிகழ்ச்சி நடத்தினால், அதில் கிடைக்கும் பணத்தை எல்லாம் அந்தக் குழந்தைகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவார்கள். நீங்களும் அதேபோன்று, உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளை முன்வைத்து உலகெங்கும் பரவியுள்ள ஈழத்தமிழர்கள் முன்பு ஓவியக் கண்காட்சி நடத்துகிறீர்கள். அந்தக் கண்காட்சிகளின் மூலம் கிடைக்கும் பணத்தை எந்த நல்ல காரியத்திற்காக செலவழித்திருக்கிறீர்கள்? அப்படி ஏதும் செய்யவில்லையென்றால், குலுக்கல் நடனம் ஆடி புலம்பெயர்ந்த தமிழர்களை சுரண்டும் சினிமா நடிகர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
8. தனது ஏமாற்றுவேலை தெரிந்துவிட்டது என்றவுடன், ‘வேண்டுமானால் ஓவியத்தை எடுத்துப் போகச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். யாரும் இதைப் பற்றி பேசியிருக்காவிட்டால் அப்படியே அமுக்கி இருப்பீர்கள்தானே?
9. ‘ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு’ என்று பேசுபவர்கள் எல்லாம் காசுக்காகத்தான் பேசுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு இங்கு இருக்கும்போது, தங்களின் செய்கை அதற்கு உரமூட்டுவது போலில்லையா? உண்மையான உணர்வாளர்களுக்கு நீங்கள் இழைக்கும் அநீதி அல்லவா இது?
10. இவை எல்லாவற்றையும் விட, நாள்தோறும் எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் பெயரைச் சொல்லி சம்பாதிப்பதை விட, பிச்சை எடுப்பது மேலல்லவா?
பணம் கொடுத்த நண்பர்கள், ‘அவர் செய்தது தப்பு என்று தெரிகிறது. ஆனால் கொடுத்த பணத்தை எப்படித் திரும்பக் கேட்பது?’ என்று சொல்கிறார்கள். அவர்களின் இந்தப் பெருந்தன்மைக்கு உரியவராக புகழேந்தி நடந்துகொள்ளவில்லை என்பதுதான் வேதனை. இதை வெளியே சொல்வதற்குக்கூட அந்த நண்பர்கள் தயாராக இல்லை. கண்முன்னே நடக்கும் அநியாயத்தை கண்டும் காணாமல் இருக்க முடியாமல், கீற்று ஆசிரியராகத் தான் இதை நான் பதிவு செய்கிறேன்.
வெறும் 10000 ரூபாயை ஒரு பெரிய பிரச்சினையாக எழுதவேண்டுமா?
இன்னொருவர் ஏமாற்றப்படுவதை தடுக்க வேண்டுமென்றால், நிச்சயம் எழுதித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் இவரை ஓர் இனவுணர்வாளர் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் நாடுநாடாக அழைத்துக்கொண்டு போய் கண்காட்சி நடத்துகிறார்கள். இவர் என்னடாவென்றால், இனவுணர்வை தனது வியாபாரத்திற்கான முதலீடாகப் பயன்படுத்துகிறார். இதோ, ஈழத்தமிழர்களின் கொடுமைகளை ஓவியங்களாக வரைந்து, ஓரிரு மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் கண்காட்சி நடத்தவிருக்கிறார்; அப்பாவித்தமிழர்களை சுரண்டவிருக்கிறார்.
உலகத்தமிழர்களே! உங்களது உணர்வை வைத்துப் பணம் சம்பாதிக்கும் புகழேந்தியிடம் கவனமாக இருங்கள்! இல்லையென்றால் அவரது ஓவியத்தோடு உங்களையும் சேர்த்து விற்றுவிடுவார்...
- 'கீற்று' நந்தன் (editor@keetru.com)
தமிழினத்தினை கெடுக்கும் தமிழ் வியாபாரிகள்: ஆய்வு 1 - தமிழ்தாத்தா
Saturday, July 11, 2009
திருவள்ளுவருக்கு நிகரானவரா சர்வக்ஞர்.....?
பண்டமாற்று போல் ஆக்கிவிட்டார்கள் திருவள்ளுவரை. எம்மதத்தினையும் சாராமல் உலக மக்கள் அனைவருக்கும் பொதுமறை தந்த வள்ளுவர் சிறுமைப்படுத்திவிட்டார்கள்.
சரி சிலைக்கு சிலை.
தஞ்சை விவாசாயிகளுக்கு விவசாயம் செய்ய அதைப் போல ஏதாவது பண்டமாற்று போல் தமிழக முதல்வர் செய்தால் நன்றாக இருக்கும்.
நெய்வேலி மின்சாரம் வேணும்னா காவிரி நீரை கொடுனு சொல்லலாம். ஆனால் நம்மாளு இப்படி சொல்லமாட்டாரே.
ஏனென்றால் நம்மாளுக்குதான் அங்கே உதயா ரீவி , தேஜா ரீவி என்று கன்னட தொலைக்காட்சித்தொழில்கள் ஓடுதே.
அதனால இந்த ஐடியா ஒத்து வராது விவசாயிகளுக்கு...
என்னோட வெட்டிப்பாமர சிந்தனையிருந்து வந்தத சொல்லுறேன்.
விவசாயிகள் அனைவரும் தமிழக முதல்வருக்கு நீரை வாங்கக்கோரிக்கை வைப்பதைவிடுத்து.
இந்திய இறையாண்மைக்கு பங்கம் வராத வகையில் காவிரி நீர் பாயும் அனைத்து பகுதிகளையும் கர்நாடக மாநிலத்திற்கே இணைத்துவிடக்கோரி மத்திய அரசிடம் வேண்டுகோள் வைக்கலாம்.
இந்த வேண்டுகோளுக்கு கண்டிப்பாக கர்நாடக மக்களும் அரசியல்வாதிகளும் உறுதுணையாக இருப்பார்கள்.
மத்திய அரசு , உச்ச நீதிமன்றத்தின் காவிரி நீர் பற்றிய தீர்ப்பையே காதில் வாங்கிக்கொள்ளாத வீரமிக்க கன்னடமக்கள் கண்டிப்பாக காவிரி நீர் வேண்டி நிற்கும் தமிழக விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் வீரத்தோடு போராடுவார்கள்.
தமிழ் மொழியில் குறிப்பிட்ட சதவீத அளவு சமஸ்கிருதம் கலந்ததுதான் கன்னடம் என்பதால் காவிரியாற்றங்கரை மக்கள் எளிதில் கன்னட மொழியினை கற்று கன்னடர்களாக மாறி உயிர்வாழலாம்.
தமிழ் மொழி , தமிழ் என்று இங்கு பேசும் அனைவரும் அதை வியாபார பொருளாக்கி வியாபாரம் செய்வதால் பாமர மக்கள் எலிக்கறி திங்கின்றனர்.
பாமர மக்களாகிய விவாசாயிகள் தமிழ் என்ற அடையாளத்தினை விட்டுவிட்டு கன்னடர்களாக மாறி மனிதர்களாக உயிரோடு வாழலாம்.
தமிழர்களாக இன்னும் நீங்கள் இருந்தால் உங்கள் அடுத்த தலைமுறை இருக்காது.
இதைப்போல மேற்கு பகுதி மாவட்டங்களை கேரளாவோடு இணைத்தால் கேரளா அரசு அப்பகுதி வாழ் மக்களுக்கு முல்லைபெரியாறு நீரை எளிதில் கொடுக்கும்
தனது மாநிலத்துக்கு தனது மாநில மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் கர்நாடக, கேரளா அரசுகள் உணர்வோடு பூர்த்தி செய்தே வருகிறது.
எனவே இந்த வெட்டிப்பாமரனின் சிந்தனைகள் கண்டிப்பாக மக்களுக்கு பயன்படுமென்றே எண்ணுகிறேன்.
தொடரும் வெட்டிப்பாமரபயலின் சிந்தனைகள்....
படிக்கிறவங்க கொஞ்ச நேரம் நமக்கு ஒதுக்கி பின்னூட்டம் போட்டு என் சிந்தனையை கொஞ்சம் தூண்டிவிட்டா நல்லா இருக்கும்...
இலங்கை கடற்படையினரிடமிருந்து தமிழக மீனவர்களை காக்க என்ன செய்யலாம்....? வெட்டியின் சிந்தனை
தலைப்பை பார்த்து ஏதோ முக்கியமானதா சொல்ல போறேனு நினைக்க வேண்டாம்.
வெட்டிப்பாமரபயலின் சிந்தனையில் வந்ததை சொல்லுறேன் இங்கே,
நானும் நினைவு தெரிந்த நாளிலிருந்து செய்தித்தாள்களில் இராமேஸ்வரம் மீனவர்கள் படும் கொடுமைகளை பற்றி பார்த்துக்கிட்டு இருக்கேன்.
கொஞ்ச நாள் முன்னாடி நான் வெட்டியா இருக்கும்பொழுது என் மண்டையில் தோன்றுன தீர்வை இங்கே சொல்லுறேன்.
மீனவர்களை காக்க இலங்கையின் இறையாண்மையை காக்க மீனவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு கச்சத்தீவினை இலங்கைக்கு தாரைவார்த்தது போல் இராமேஸ்வரத்தினையும் இலங்கைக்கு தாரை வார்க்க போராட வேண்டும்.
தங்களது படகுகளில் சிங்களக்கொடிகளை பறக்கவிட்டு மீன் பிடிக்க வேண்டும்.
30 நாட்களில் சிங்கள பாஷை என்ற புத்தகம் இருந்தால் அதை வாங்கி சிங்களம் கற்றுக்கொள்ள வேண்டும்.
சிங்கள தேசிய கீதத்தினை மனப்பாடம் செய்துகொள்ள வேண்டும்.
அல்லது
இந்தியாவில் நான் தமிழன் என்று இத்தனை நாள் இருந்து பல உயிர்களை இழந்ததால் தமிழன் என்ற அடையாளத்தினை விட்டு இந்தி, மராத்தி மொழிகளை படித்து இந்தியனாக மாறி தமிழக அரசின் தொடர்பினை விட்டு இராமேஸ்வரத்தினை மகராஸ்ட்ரா அல்லது மத்திய பிரதேச மாநிலங்களோட இணைத்துக்கொள்வது.
மேற்கண்ட எனது தீர்மானங்களை மீனவர்கள் முழுமூச்சோடு கொண்டு செயல்படுத்தினால் இப்பொழுது மீனவர்கள் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு பலியாகமல் தங்களது பேரன் பேத்திகளை காண உயிரோடு இருப்பார்கள்.
மின்னஞ்சல், எஸ் எம் எஸ் , செல்ப்போன் காலத்திலும் ஒருவர் மீனவர்களை காக்க நான் கடிதம் எழுதியுள்ளேன், அனுப்பியுள்ளேன் என்று காதில் பூ சுற்றுவதால் மேற்கண்ட சிந்தனைகள் என் மனதில் தோன்றியது.
படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களை பின்னூட்டம் போட்டு எனது சிந்தனைகளுக்கு பூஸ்ட் ஏற்றினால் நல்லா இருக்கும்....
தொடரும் வெட்டிப்பயலின் பாமர சிந்தனைகள்..............
Friday, July 10, 2009
திரைப்படம்: ஜப்பானில் சீன ஏழைகளின் வாழ்க்கை: Shinjuku Incident
நேற்று நான் பார்த்த சினிமா:
Shinjuku Incident
பல இடங்களில் மக்கள் அகதிகளாக சென்று பல்வேறு நிலைகளில் வாழ்க்கை முறையே மாறிவிடுகிறது.
சீனாவிலிருந்து ஜப்பானுக்கு வரும் சீன இளைஞனின் கதையை இப்படம் எடுத்துச்சொல்கிறது.
அந்த இளைஞனாக அய்ம்பது வயதை கடந்த நம் அனைவரும் விரும்பப்படும் ஜாக்கிஷான் நடித்துள்ளார். ஜாக்கிஷான் படம் என்பதே தெரியாதவண்ணம் சண்டைக்காட்சிகளை சாதாரண சண்டைகளாகவே வைத்து கதையை நன்றாக கொண்டுசென்றார்கள்.
சீனாவிலிருந்து டோக்கியோவிற்கு சென்ற தன் காதலியை தேடிவரும் ஜாக்கி அங்கே தன் காதலி ஒரு குழந்தையோடு இருப்பதைக்கண்டு நொந்து போவது, தன்னை கைது செய்யவரும் காவலர் விபத்தில் சிக்கிய பொழுது காப்பாற்றியதற்காக கடைசி வரை அக்காவலர் ஜாக்கிஷானுக்கு ஆதரவாக இருந்து திருத்தப்பார்ப்பது, ரவுடியிடல் காப்பாற்றிய பெண்ணோடு நட்போடு கடைசி வரை இருப்பது, நண்பனின் கையை வெட்டியவனின் கையை பதிலுக்கு வெட்டும் சாதாரன மனிதனாக பின்னர் கூட்டத்தலைவனாக மாறுவது என யதார்த்தமாக கதை போகிறது.
இறுதியில் இப்படத்தில்......
படத்தினை பாருங்கள் மீதிக்கதைக்கு
படத்தின் தகவலை காண :
http://www.imdb.com/title/tt1075419/
Synopsis / Plot / Review
A simple Chinese immigrant wages a perilous war against one of the most powerful criminal organizations on the planet in this sprawling action drama directed by Derek Yee (One Night in Mongkok) and starring Jackie Chan, Daniel Wu, and Masaya Kato. In Japan, foreign migrants are shunned by mainstream society. Taunted by the yakuza, they live in constant fear of being discovered and repatriated. Into this perilous world ventures Steelhead (Chan), a humble tractor repairman who has traveled to Tokyo in search of his missing girlfriend, Xiu Xiu (Xu Jinglei), who vanished into thin air shortly after arriving in the city. It doesn't take Steelhead long to learn just what kind of hardships Chinese immigrants in Japan endure at the hands of underworld gangsters and foreign crime syndicates, and upon discovering that Xiu Xiu has adapted a Japanese identity and married up-and-coming yakuza chief Eguichi (Masaya Kato), the two men form an uneasy alliance. Over time, Steelhead earns the respect of his fellow Chinese immigrants by establishing a place for them to gather. But the dark side still beckons to Steelhead, because after helping Eguichi dispense with a powerful rival, he is granted full control of Shinjuku's most popular nightspots. Resistant to the allure of the criminal lifestyle, Steelhead discovers a new love and opens a tractor repair business just outside the city. When Equichi begins using Steelhead's former compatriots as pawns to front the yakuza's drug trade, the vengeful immigrant returns to the city determined to exact justice, even if it means destroying the future of the woman he once loved.
Thursday, July 9, 2009
மதிமாறினவரின் அடுத்த பிளாக் என்ன......?
இந்த ஆறு மாசமா அவர பத்தி எனக்கு தெரிஞ்சதுல அவரோட அடுத்த பிளாக் பெயர்
" சிறையில் நானும் என்.எஸ்.ஏ வழக்கில் கைதான் ராமகிருஷ்ணனும் " ( சிறைக்கு வெளியில் எடுத்த படங்கள் இணைப்பு)
நேத்து நான் தமிழ்மணத்த பார்க்குறப்ப என் ரூம்கு வந்த நம்ம கோவை பையன் ஒருத்தன் சொன்னான்.
அதை வைச்சு நான் கெஸ் பண்ணுன தலைப்பு இது.
ஏன்னா மதிமாறினவரின் பிளாக் ல இப்படி பிரபலப்படுத்த நிறைய இருக்கும்.
இல்லாட்டினா குழப்புறமாதிரி ஏதாவது இருக்கும்.
நானும் அவர் பிளாக்..ல முழுசா படிக்கலாம்னு பார்த்தா ஒன்னும் விளங்கலை. சரி பின்னூட்டத்தினை பார்த்த அங்கே வெட்டு குத்து ரேஞ்சுக்கு போகுது ஆனா மதிமாறினவர் உள்ள புகுந்த மாதிரி தெரியலை.
எங்கூர்ல சொல்லுவாங்க நாரதர் பத்தி. இப்ப மதிமாறன பார்த்த நாரதர் மாதிரியே எனக்கு தோணுது.
மதிமாறினவரே ஏதாவது நான் தப்பா சொன்னா. என் தப்பா திருத்துங்க. நீங்க கோபப்படமாட்டீங்கனு தெரியும். நீங்க பெரிய அறிவாளி சிந்தனையாளர். நீங்களாம் அமைதியாத்தான் இருப்பீங்கனு எண்ணுறேன்.
கொஞ்ச நாள் முன்னால அந்த ராமகிருஷ்ணர ஊங்க பிளாக்ல திட்டுனீங்க. ஆனால் அவங்க தலைவர சிறைல போய் பார்த்துட்டு ஒரு பயணக்கதை பிளாக்ல போட்டீங்க.
அவங்க உங்க நண்பர்னு சொல்லுறீங்க. உங்க நண்பர்கள் செய்த தவற அந்த நண்பர்கள் கிட்ட சொல்லி திருத்தாம ஊரெல்லாம் போய் சொன்னா.
நாரதர் வேலைதானுங்க இது பேரு...?
இலங்கை தமிழர்களுக்காக மக இ க வும் , பெரியார் கட்சி காரங்களும் நல்லா போராடினாங்க.
நீங்க அந்த நேரத்துல கூட கொஞ்சம் இரண்டு பேருக்கும் சண்டைய மூட்டிவிட்டூட்டீங்க.....
மதிமாறினவரே நீங்க மாடர்ன் நாரதரா?
எனக்கு ஒன்னும் புரியலை.... நீங்க நல்லவரா கெட்டவரா?
இப்படி வடிவேலு ரேஞ்சுக்கும் எங்கள கொண்டு போய்ட்டூங்களே.
வலைப்பூவில் பிரசித்தி பெற என்ன செய்யலாம்?
எல்லாம் பெரிய பெரிய அறிஞர்களாவுலா இருக்காங்க வலைப்பூவுல.
சரி தலைப்புக்கு வரேன் . நான் கடந்த ஆறு மாசமா பார்த்ததுல இருந்து வலைப்பூவில் நம்ம வலைப்பூவ பிரசித்தி பெற வைக்க பிரபலமா இருக்குற வலைப்பூ கூட சண்டை போடுறது. அதாவது விமர்சனம் பண்ணி நம்மள விளம்பரப்படுத்திக்கிறது.
இல்லாட்டி பிரபலமா இருக்குற யாரையாவது திட்டுறது, விமர்சனம் பன்னுறது.
நம்ம கமென்ட்ஸ் களா அங்க போடாததுக்கு நம்ம வலைப்பூவில் அதை போட்டு சண்டை பிடிக்குறது.
இலங்கை தமிழர் பற்றி வலைப்பூவில் எழுதி பல பேர் பிரபலமானாங்க. ஆனா இப்ப ஒரு பேச்சையும் காணோம்.
இப்ப சீஸன் என்னனு எனக்குத்தெரியுல இருந்தா சொல்லுங்க நானும் கொஞ்சமாவது பிரபலாமாகிக்கிறேன்.
இல்லனா மகா நடிகன் சத்யராஜ் மாதிரிதான் நானும் வலைப்பூவ கொண்டு போனும் போல இருக்கு.
படிக்கிறவங்க கொஞ்சமாவது பின்னூட்டம் போட்டு எனக்கு பூஸ்ட் ஏத்திவிடுங்க.
வெட்டியாய் இருப்பது எப்படி ?
இதுக்கு வெட்டியா இருப்பதே நல்லதுனு தோணுது. மறுபடியும் இன்டர்வியூ போற கம்பெனிலவாவது சம்பளம் ஒழுங்கா தருவானா இல்லையானு டவுட்டாதான் இருக்கு.
நம்மள வேலைய வாங்கிட்டு அவனவன் நமக்கு சம்பளம் தராம சொகுசா ஓடிடுறானுங்க. நம்ம நிலைமை இங்கு ...............
அடுத்த வெட்டிவேலையில் ஏமாறுற வரைக்கும் நாமளும் வலைப்பூ கோதாவுல இறங்கலாம்னு வந்துருக்கேன்.
வணக்கம் மக்கா
பல அறிஞர்களும் , பல சிந்தனையாளர்களும் நாள்தோறும் 23 மணி நேரம் 59 நிமிடங்கள் 59 நொடிகளையும் வலைப்பூக்களிலே புரச்சியும் போறாட்டமும் செய்யும் இவ்வேளையில் இந்த வெட்டிப்பயலும் இணைந்துகொள்ள விருப்பப்படுகிறேன்.
வெட்டி ஆபிஸரா இருக்கும் எனக்கு வேலையில் பிஸியா இருக்கும் எல்லாரும் உதவுனா நல்லா இருக்கும்