Thursday, July 23, 2009

தமிழினத்தினை கெடுக்கும் தமிழ் வியாபாரிகள்: ஆய்வு 1 - தமிழ்தாத்தா

தமிழுக்காகவும் தமிழருக்காகவும் பாடுபடுகிறேன் என்று பலர் கூறிக்கொண்டு தமிழை கடைச்சரக்காக மாற்றி வருகின்றனர்.
தன்னுடைய தலைக்கன விளம்பரத்துக்காக மக்களை குழப்பிவருகின்றனர் இப்படிப்பட்ட தமிழ் குழு வியாபாரிகள்.
கடந்த 6 மாத காலமாக வெட்டியாய் உட்கார்ந்து வலைப்பூக்களை படித்து வருவதால் ஒரு சில அமைப்பு( வியாபாரிகளை) தெரிந்துகொண்டுள்ளேன்.
என் வெட்டிச்சிந்தனையில் வந்ததை இங்கு கூறுகிறேன். இவை ஏற்கெனவே உங்களுக்கு தெரிந்ததாக இருக்கலாம்.
இவ்வலைப்பூவின் மூலமாக பல அமைப்புகளை பற்றி நான் சிலவற்றை தெரிந்துகொண்டேன் என் சிந்தனையில் வந்ததை கூறுகிறேன். ஏதேனும் தவறிருந்தால் என் தவறை உணர்த்தி திருத்துங்கள்.
வெட்டிப்பாமரனின் ஆய்விலிருந்து,
தமிழ் தேசியம் என்று பேசும் தமிழ்தாத்தா ஒருவர் தான் தான் ஈழத்தையே குத்தகைக்கு எடுத்தது போல் பேசிக்கொண்டு இருக்கிறார்.
அவரது அமைப்பை பற்றி ஆராய்ந்தால் அவர் ஒன் மேன் ஆர்மி அமைப்பு என்று தெரிய வந்தது.
வெளிநாடுகளில் ஈழத்தமிழர்கள் வைத்துள்ள அமைப்புகளில் பெயர்களில் எல்லாம் தான் ஒரு அமைப்பை உருவாக்கி வைத்துள்ளார்.
name registration செய்து வைத்துள்ளார்.
நேற்று பிரான்ஸ் உலகத்தமிழர் பேரவை என்ற பெயரில் இணையத்தில் அறிக்கை ஒன்றை படித்தேன்.
அதே பெயரில் அந்த தமிழ் தாத்தா ஒரு அமைப்பையும் வைத்துள்ளாராம்.
அந்த அமைப்பின் வேலை ஆண்டுக்கொருமுறை பணம் திரட்டி அதிக பணம் கொடுத்தவர்களுக்கு பட்டம் கொடுப்பதாம்.
சில நாட்களுக்கு கோயம்பத்தூரை சேர்ந்த பணக்காரர் ஒருவருக்கு பட்டம் கொடுத்துள்ளார். அந்த பணக்காரரோ அந்த மேடையிலேயே தமிழ் படித்தால் கட்டவண்டியில்தான் போக முடியும் , சமஸ்கிருதம் படித்தால் விண்ணில் பறக்க இயலும் என்று சொல்லியுள்ளார்.
இதைப்பற்றி அந்த தமிழ்தாத்தா ஒரு கேள்வியும் கேட்கவில்லையாம், தமிழுணர்வு கொண்ட இதர அமைப்பு ஆட்கள் இருவர் வெகுண்டெழுந்து கேள்வி கேட்டதற்கு இந்த தமிழ் தாத்தா கேவலப்படுத்தி துரத்துவிட்டுவிட்டாராம்.
அப்படி துரத்தப்பட்ட ஆட்களில் ஒருவர் ஈழமக்களுக்காக 1992 கால கட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவராம். தற்பொழுதும் சிறையில் இருக்கிறாராம். மற்றொருவரும் ஈழமக்களுக்காக சிறை சென்று சில நாட்களுக்கு முன்புதான் விடுதலையடைந்துள்ளாராம்.
அந்த தமிழ்தாத்தா எதற்காக அப்படி செய்தார் என்று விளங்கவில்லை. தெரிந்தவர்கள் எனக்கு விளக்கப்படுத்தலாம்.
ஆனால் அந்த தமிழ் தாத்தா தனி மனித ஒழுக்கத்தில் சிறந்தவர் , உயர்ந்தவர்.
ஈழப்பிரச்சினையில் ஈழமக்களை காப்பாற்றுவதை பற்றி யோசிக்காமல் திமுக தலைவர் கருணாநிதியை விமர்சிப்பதிலேயே நேரத்தினை செலவிட்டு..
கலைஞரிடம் கொஞ்சநஞ்சம் இருந்த ஈழமக்கள் பற்றிய எண்ணத்தினையும் மன ரீதியாக கெடுத்ததில் முதல் பங்கு இந்த தமிழ்தாத்தாவுக்கு என்று என் மனதில் படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஈழப்புலிகளின் பொறுப்பாளர் பத்மநாதன் வெளியிட்ட அறிக்கையை பற்றி " பத்மநாதனின் அறிக்கை துரோகத்தனமானது றோவின் கையால் பத்மநாதன் " என்று சொல்லியுள்ளார்.
அவரது அமைப்பின் லெட்டர் பேடில் அந்த அமைப்பினர் அறிக்கை விடுகின்றனர். அந்த அமைப்பின் அறிக்கையை மறுக்கவோ விமர்சிக்கவோ அந்த அமைப்பினருக்குதான் உண்டு.
இவர் எப்படி அவரையும் அந்த அமைப்பினரின் அறிக்கையை விமர்சிக்கலாம் என்று எனக்கு தெரியவில்லை.
புலம்பெயர் தமிழரிடம் நான் கேட்ட பொழுது அவர் சொல்லியது என்னவென்றால்" பத்மநாதன் இயக்கத்தின் தலைவரால் நியமிக்கப்பட்டவர், அவரது அறிக்கை இயக்க லெட்டர் பேடில் வந்துள்ளது. எங்கள் சனங்களுக்காக பாடுபட்ட அந்த இயக்கத்தின் லெட்டர் பேடுக்கு என்ற மரியாதையை நாங்கள் கொடுத்துதான் ஆக வேண்டும், அதை மறுக்கவும் விமர்சிக்கவும் அவ்வமைப்பின் மற்ற பொறுப்பாளருக்கே உண்டு வேறு யாருக்கும் எவ்வித தகுதியும் இல்லை" என்றார்.
இரண்டு நாள் முன்பு அவ்வமைப்பினரின் தலைமைச்செயலகத்திலிருந்து பத்மநாதன் வழிகாட்டுதலின் பேரில்தான் அனைவரும் செயல்படுவோம் என்று அறிக்கை வெளியிட்டு அந்த தமிழ்தாத்தாவின் முகத்தில் அறைந்தது போல் சொல்லியுள்ளார்கள். இப்பொழுது அவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்ததாக கேள்விப்பட்டேன்.
அக்காங்கிரஸின் எண்ணங்கள் இன்னும் அவரை விட்டு விலகவில்லையோ என்னவோ எனக்குப்புரியவில்லை.
இவர் இதற்கு முன்பு, அந்த ஒருங்கிணைப்பு குழு, இந்த ஒருங்கிணைப்பு குழு என்று போட்டு தலைவர் நான் என்று போட்டு பல அமைப்புகள் அமைத்துள்ளார்.
ஈழத்தமிழர் என்று அமைப்பில் பெயர் வைக்கக்கூட இயலாமல் இலங்கைத்தமிழர் என்று பெயர் வைத்துள்ள இவர்களாலா ஈழத்தமிழர்களுக்கு போராட இயலும் ....?
அந்த தாத்தாவுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சினை கண்களுக்கு தெரியாது போல், அவர் பேசும் தமிழ் தேசியம் மேட்டுக்குடி தமிழ் தேசியம், தமிழ்நாட்டு தமிழர்களுக்காக எவ்வித போராட்டங்களையும் செய்யாத இவரா ஈழத்தமிழர்களுக்கு சாரி இலங்கைத்தமிழர்களுக்கு போராட போகிறார்.
சரி அவர் என்ன செய்வார். அவரது அமைப்பில் ஒன் அண்ட் ஒன்லி மெம்பர் லீடர்தானே,
அந்த தமிழ்தாத்தாவின் வாரிசு அவருக்கு மேல்,
தமிழ்நாட்டில் நடக்கும் ஈழ ஆதரவு போராட்டங்கள் எல்லாம் தமிழ்தாத்தா வழிகாட்டுதலின் பேரில்தான் நடைபெறுகிறது என்று வெளிநாட்டிலுள்ள ஊடகங்களுக்கு செய்தி கொடுத்துவிடுவார்.
கையில் லேப்டாப்பும் , கேமராவோடும் திரிவதுதான் இவரது வேலையாம். தமிழ்தாத்தாவை மட்டும் படம் எடுத்து உணர்வுள்ள வேறு அமைப்பினர் ஈழ மக்களுக்காக நடத்திய போராட்டத்தினை தமிழ்தாத்தா நடத்தியது போலவும் , அவர்தான் தலைமை என்றும் உடனுக்குடன் வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுக்கு கொடுத்துவிடுவார்.
மறந்தும் கூட மற்ற அமைப்பினர் நிகழ்ச்சிகளை வெளியிட்டுவிடமாட்டார். செய்திகளையும் , படங்களையும் , வீடியோவும் எடுத்துக்கொண்டு தான் செய்தித்தளங்களுக்கு அனுப்புவதாக கூறிவிட்டு. மற்றவர்களின் போராட்டங்களை புலம்பெயர் தமிழர்களுக்கு செல்லவிடாமல் தடுத்துவிடுவார்.
இதைப்பற்றி அவரது மகளிடம் IT மென்பொருள் மாணவர்கள் கேள்வி கேட்டு திட்டிவுள்ளார்கள் ஏன் இந்த பிழைப்பு என்று. ஆனால் அவர் மழுப்பிவிட்டு சென்றுவிட்டாராம்.
இப்படிப்பட்ட விளம்பர பிரியர்களின் தவறான செய்தியால் ஈனத்தமிழ்நாட்டில் ஈழமக்களுக்கு ஆதரவாக பலர் உள்ளனர் என்று ஈழமக்கள் எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது.
வெட்டியின் வலைப்பூ ஆய்வுகளிலிருந்து உதித்த கருத்துக்கள் இவை. இவற்றில் நான் தவறாக சொல்லியிருந்தால் படிப்பவர்கள் எனக்கு தெளிவுபடுத்தி எனது தவறினை திருத்தவும்....
விரைவில் வெட்டிப்பாமரனின் 2 ஆம் ஆய்வு வரும்.

1 comment:

Robin said...

//அவரது அமைப்பில் ஒன் அண்ட் ஒன்லி மெம்பர் லீடர்தானே// :)

Post a Comment