இந்த ஒரு ஆறு மாசமா மதிமாறினவரோட பிளாக்குகளை படிச்சிட்டு வாரேன். ஆனா அவர் என்ன சொல்லுறாருனு தெரியலை எனக்கு. நமக்கு அந்த அளவுக்கு அறிவு பத்தாது.
இந்த ஆறு மாசமா அவர பத்தி எனக்கு தெரிஞ்சதுல அவரோட அடுத்த பிளாக் பெயர்
" சிறையில் நானும் என்.எஸ்.ஏ வழக்கில் கைதான் ராமகிருஷ்ணனும் " ( சிறைக்கு வெளியில் எடுத்த படங்கள் இணைப்பு)
நேத்து நான் தமிழ்மணத்த பார்க்குறப்ப என் ரூம்கு வந்த நம்ம கோவை பையன் ஒருத்தன் சொன்னான்.
அதை வைச்சு நான் கெஸ் பண்ணுன தலைப்பு இது.
ஏன்னா மதிமாறினவரின் பிளாக் ல இப்படி பிரபலப்படுத்த நிறைய இருக்கும்.
இல்லாட்டினா குழப்புறமாதிரி ஏதாவது இருக்கும்.
நானும் அவர் பிளாக்..ல முழுசா படிக்கலாம்னு பார்த்தா ஒன்னும் விளங்கலை. சரி பின்னூட்டத்தினை பார்த்த அங்கே வெட்டு குத்து ரேஞ்சுக்கு போகுது ஆனா மதிமாறினவர் உள்ள புகுந்த மாதிரி தெரியலை.
எங்கூர்ல சொல்லுவாங்க நாரதர் பத்தி. இப்ப மதிமாறன பார்த்த நாரதர் மாதிரியே எனக்கு தோணுது.
மதிமாறினவரே ஏதாவது நான் தப்பா சொன்னா. என் தப்பா திருத்துங்க. நீங்க கோபப்படமாட்டீங்கனு தெரியும். நீங்க பெரிய அறிவாளி சிந்தனையாளர். நீங்களாம் அமைதியாத்தான் இருப்பீங்கனு எண்ணுறேன்.
கொஞ்ச நாள் முன்னால அந்த ராமகிருஷ்ணர ஊங்க பிளாக்ல திட்டுனீங்க. ஆனால் அவங்க தலைவர சிறைல போய் பார்த்துட்டு ஒரு பயணக்கதை பிளாக்ல போட்டீங்க.
அவங்க உங்க நண்பர்னு சொல்லுறீங்க. உங்க நண்பர்கள் செய்த தவற அந்த நண்பர்கள் கிட்ட சொல்லி திருத்தாம ஊரெல்லாம் போய் சொன்னா.
நாரதர் வேலைதானுங்க இது பேரு...?
இலங்கை தமிழர்களுக்காக மக இ க வும் , பெரியார் கட்சி காரங்களும் நல்லா போராடினாங்க.
நீங்க அந்த நேரத்துல கூட கொஞ்சம் இரண்டு பேருக்கும் சண்டைய மூட்டிவிட்டூட்டீங்க.....
மதிமாறினவரே நீங்க மாடர்ன் நாரதரா?
எனக்கு ஒன்னும் புரியலை.... நீங்க நல்லவரா கெட்டவரா?
இப்படி வடிவேலு ரேஞ்சுக்கும் எங்கள கொண்டு போய்ட்டூங்களே.
Thursday, July 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அண்ணே ஆறு மாசத்துக்கு மேல படிக்கிறீங்க “வெட்டிப்பயல்”ன்னு ஏற்கனவே ஒருத்தர் இருக்காரே தெரியாதே?. வேற பெயர் வைங்கண்ணே குழப்பமாகிடும்.
வலைப்பூ உறவுகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த வெட்டிப்பயல் இனி வெட்டிப்பாமர பயல் ஆகிட்டான்
//வலைப்பூ உறவுகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த வெட்டிப்பயல் இனி வெட்டிப்பாமர பயல் ஆகிட்டான்//
புரிதலுக்கு நன்றி வெட்டிப் பாமர பயலாரே!
:)
பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் வெட்டிப்பாமரபயலின் நன்றிகள்
Post a Comment